உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  பசுமை தீர்ப்பாய உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தல்

 பசுமை தீர்ப்பாய உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தல்

சென்னை: 'பள்ளிக்கரணை சதுப்பு நிலத்துக்கு, 1 கி.மீ., சுற்றளவுக்கு கட்டடங்கள் கட்ட தடை விதித்து, பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்' என, குடியிருப்போர் சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன. சோழிங்கநல்லுார் தொகுதி குடியிருப்போர் பொதுநலச்சங்க நிர்வாகிகள் அளித்த பேட்டி: பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை ஒட்டிய, 1 கி.மீ., சுற்றளவுக்கு கட்டுமான திட்டங்களை அனுமதிக்க கூடாது என, பசுமை தீர்ப்பாயம் சமீபத்தில் உத்தரவிட்டது. இதனால், இங்குள்ள 16 கிராமங்களில், 1,300 சர்வே எண்களில் வசிக்கும் குடும்பங்கள் வீடு கட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மக்களின் நலன் கருதி, பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் குப்பை கொடப்படுகிறது. அங்கு, ஆக்கிரமிப்புகளும் உள்ளன. குப்பை கொட்டுவதை நிறுத்தி, ஆக்கிரமிப்பு இடங்களையும் மீட்டு, சதுப்பு நிலமாக மாற்றி, வனத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும். இந்த விவகாரத்தில், முதல்வர் தலையிட்டு தீர்வு காண்பார் என நம்புகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை