மேலும் செய்திகள்
துாய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்
27-Sep-2024
சென்னை, உலக வெறிநாய்க்கடி நோய் தினத்தையொட்டி, மாநகராட்சி பகுதிகளில், 'ரேபிஸ்' நோய் தாக்கத்தில் இருந்து நாய் பிடிக்கும் பணியாளர்கள் மற்றும் கால்நடை மருத்துவ பணியாளர்களை பாதுகாத்திடும் வகையில், தடுப்பூசி முகாம் ரிப்பன் மாளிகையில் நேற்று நடந்தது.இதில், நாய் பிடிக்கும், 215 பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டதுடன், சீருடைகள், காலணிகள், கையுறைகள் நாய் பிடிக்கும் வலைகளை, சுகாதார நிலைக்குழு தலைவர் சாந்தகுமாரி வழங்கினார்.இந்த முகாமில், மாநகர நல அலுவலர் ஜெகதீசன், மருத்துவ அலுவலர் பானுமதி, கால்நடை மருத்துவ அலுவலர் கமால் உசேன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
27-Sep-2024