உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வாகனங்களின் உதிரிபாகங்கள் திருடியோர் கைது

வாகனங்களின் உதிரிபாகங்கள் திருடியோர் கைது

அமைந்தகரை, செனாய் நகர் முதல் பிரதான சாலையில், அமைந்தகரை போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சாக்கு பையுடன் வந்த செனாய் நகரை சேர்ந்த நாகராஜ், 37, தினேஷ், 36 ஆகிய இருவரை பிடித்து சோதித்ததில், கார்களின் உதிரிபாகங்கள் இருந்தன. விசாரணையில், சாலையோரங்களில் கேட்பாரற்று நின்றிருக்கும் வாகனங்களில் உதரிபாகங்களை திருடி, அவற்றை புதுப்பேட்டையில் விற்று பணம் சாம்பாதித்து வந்தது தெரியவந்தது. கடந்தாண்டு ஆகஸ்டில், இதேபகுதியில், மாநகராட்சியின் பறிமுதல் வாகனங்களிலும் உதிரிபாகங்கள் திருடியதை அவர்கள் ஒப்புக்கொண்டனர். இருவரையும் கைது செய்த போலீசார், கூட்டாளிகள் மூவரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ