உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / திருத்தணி மலைக்கோவிலுக்கு வாகனங்கள் செல்ல தடை

திருத்தணி மலைக்கோவிலுக்கு வாகனங்கள் செல்ல தடை

திருத்தணி, திருத்தணி முருகன் கோவிலுக்கு, தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து, முருகப்பெருமானை தரிசித்து செல்கின்றனர்.மலைக்கோவில் பகுதியில் 500 - 750 வாகனங்கள் நிறுத்தவே இட வசதி உள்ளது. ஆயிரக்கணக்கில் வரும் வாகன ஓட்டிகளில் பலர், இடவசதியின்றி, மலைப்பாதையோரம் கார், வேன், பேருந்து ஆகியவற்றை நிறுத்தி, தரிசனத்திற்கு செல்கின்றனர்.இதனால், மலைப்பாதையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், திருத்தணி - அரக்கோணம் மாநில நெடுஞ்சாலையிலும் நெரிசல் ஏற்படுகிறது. மலைப்பாதையில் நடந்து செல்ல முடியாமல், பாதசாரி பக்தர்கள் கடும் சிரமப்படுகின்றனர்.இதனால், பக்தர்கள் நலன் கருதி, அரசு விடுமுறை, வார விடுமுறை மற்றும் கோவில் விசேஷ நாட்களில், மலைப்பாதையில் கார், வேன் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. வாகனங்களை, நீதிமன்றம் பின்புறத்தில் நிறுத்த இடவசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. அதே சமயம், பைக், ஆட்டோ வாகனங்கள் செல்லலாம்.மாற்றுத்திறனாளிகள், வயதான பக்தர்கள் நலன்கருதி, கோவில் நிர்வாகம் சார்பில், இரண்டு கோவில் பேருந்துகள், இரு தனியார் பேருந்துகள் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை