உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கூடுதல் பார்க்கிங் ஏற்படுத்தியும் சாலையில் அத்துமீறும் வாகனங்கள்

கூடுதல் பார்க்கிங் ஏற்படுத்தியும் சாலையில் அத்துமீறும் வாகனங்கள்

திருமங்கலம்:அண்ணா நகர், இரண்டாவது அவென்யூவில், திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையம் உள்ளது. இங்கிருந்து தினமும், ஏராளமானோர் பல்வேறு இடங்ளுக்கு மெட்ரோவில் பயணிக்கின்றனர்.பயணியர் அதிகரிப்பு காரணமாக, வாகன நிறுத்துவதில் இட நெருக்கடி இருந்தது. இதனால், பயணியரின் வாகனங்கள், பிரதான சாலையான, இரண்டாவது அவென்யூவில் வரிசையாக நிறுத்தினர்.இதனால் விபத்து அபாயம் இருப்பதாக, நம் நாளிதழில் கடந்த ஆகஸ்டில் செய்தி வெளியானது. இதையடுத்து, திருமங்கலம் நிலையத்தில் கூடுதலாக வாகன நிறுத்தும் வசதியை, மெட்ரோ நிர்வாகம் ஏற்படுத்தியது.இருப்பினும், திருமங்கலம் மெட்ரோ நுழைவாயிலில் இருசக்கரம் மற்றும் கார்கள் மீண்டும்அதிகளவு நிறுத்தப்படுகின்றன.பொதுவாகவே திருமங்கலம் - அண்ணா நகர் ரவுண்டனா பகுதியில், போக்குவரத்து நெரிசல் அதிகளவில் இருக்கும். இந்நிலையில், 40 அடிஉடைய இச்சாலையில், இரு வரிசைகளாக 'பைக்'கள் நிறுத்துவதால், 20 அடி சாலையாக சுருங்குகிறது. இதனால், கூடுதலாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.இந்த வாகனங்கள் குறித்து, மெட்ரோ நிர்வாகம் மற்றும் மாநகராட்சியிடம் கேட்டால் முறையான பதில் கிடைக்கவில்லை.திருமங்கலம் போக்குவரத்து போலீசாரிடம் கேட்டபோது, 'ரயில் நிலைய நுழைவாயிலில் மெட்ரோ பயணியர் மட்டுமே, அவசர அவசரமாக வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர். 'இந்த இடத்தை தவிர, மற்ற இடங்களில் சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் வாகனங்கள் மீது அபராதம் விதித்து, அப்புறப்படுத்தி வருகிறோம்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை