உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சாலையோரம் வாகனங்கள் பார்க்கிங் நெசப்பாக்கத்தில் தொடருது அடாவடி

சாலையோரம் வாகனங்கள் பார்க்கிங் நெசப்பாக்கத்தில் தொடருது அடாவடி

நெசப்பாக்கம்:நெசப்பாக்கம் இணைப்பு சாலை மற்றும் எரிக்கரை தெருவில், சாலையோரம் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை அப்புறப்படுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.ராமாபுரம் மற்றும் நெசப்பாக்கத்தை இணைக்கும் பிரதான சாலையில், ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக, 2017ம் ஆண்டு 2.51 கோடி ரூபாய் மதிப்பில், 60 அடி அகலத்திற்கு இணைப்ப சாலை அமைக்கப்பட்டது. தற்போது, இந்த இணைப்பு சாலையின் இருபுறங்கள் மற்றும் நடைபாதையில் தனியார் வாகனங்கள் நிறுத்தப்பட்டு, இலவச 'பார்க்கிங்' ஆக பயன்படுத்துகின்றனர்.இதனால், பாதசாரிகள் சாலையில் நடந்து செல்லும் நிலை உள்ளது.அதேபோல், இணைப்பு சாலையில் இருந்து ராமாபுரம் செல்லும் ஏரிக்கரை தெருவிலும், சாலையோரம் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதுகுறித்து நம் நாளிதழில் செய்தி வெளியான நிலையில், கடந்த மே மாதம் சாலையோரம் இருந்த வாகனங்களை, போக்குவரத்து போலீசார் அப்புறப்படுத்தினர்.ஆனால், அதே இடங்களில் மீண்டும், போக்குவரத்திற்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்தப்பட்டு உள்ளன. எனவே, வாகன ஆக்கிரமிப்புகளை அகற்ற, மாநகராட்சி மற்றும் போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி