மேலும் செய்திகள்
அரிஸ்டோ பள்ளி மாணவர்கள் ஜே.இ.இ., தேர்வில் சாதனை
24-Apr-2025
சென்னை:வேலம்மாள் கல்விக்குழுமத்தில் பயின்ற ஹரிஹரசுதன், 99.99 சதவீத மதிப்பெண்கள் பெற்று, ஜே.இ.இ., முதன்மை தேர்வில், தேசிய அளவில் சாதனை படைத்துள்ளார்.இதுகுறித்து, வேலம்மாள் கல்விக்குழும தலைவர் எம்.வி.முத்துராமலிங்கம் கூறியதாவது: தமிழகம் மற்றும் புதுச்சேரியில், வேலம்மாள் கல்விக்குழுமம் சார்பில், ஜே.இ.இ., பயிற்சி அளிக்கப்படுகிறது. அந்தவகையில், இந்தாண்டு முதன்மை தேர்வில், 86 பேர், 99 சதவீத மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர். மேலும், 124 மாணவர்கள் 98 சதவீதம் மதிப்பெண்; 187 மாணவர்கள் 97 சதவீதம்; 241 மாணவர்கள், 96 சதவீதம்; 286 மாணவர்கள், 95 சதவீதம்; 478 மாணவர்கள், 90 சதவீதத்துக்கும் மேலான மதிப்பெண்களை பெற்று சாதித்துள்ளனர். வேலம்மாள் கல்விக்குழும ஆசிரியர்களின் தொடர்ச்சியான வழிகாட்டுதலாலும், மாணவர்களின் விடாமுயற்சியாலும், இந்த சாதனை சாத்தியமாகி உள்ளது.இவ்வாறு அவர் கூறினார். வேலம்மாள் கல்விக்குழுமத்தின் இயக்குனர் சசிக்குமார் கூறுகையில், ''பெற்றோர், ஆசிரியர்களின் ஒத்துழைப்பால் கிடைத்தமாணவர்களின் இந்த சாதனை எங்களுக்கு பெருமை அளிக்கிறது,'' என்றார்.
24-Apr-2025