உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தீபாவளி சீட்டு மோசடியில் பாதிக்கப்பட்டோர் மறியல்

தீபாவளி சீட்டு மோசடியில் பாதிக்கப்பட்டோர் மறியல்

திரு.வி.க.நகர், தீபாவளி சீட்டு நடத்தி, ஒரு கோடி ரூபாய் மோசடி செய்த குடும்பத்தினரை கைது செய்ய வலியுறுத்தி, பாதிக்கப்பட்டோர் மறியலில் ஈடுபட்டனர். பெரம்பூர், மாதவரம் நெடுஞ்சாலை பகுதியை சேர்ந்த தம்பதி சாந்தகுமார் - - செந்தில் அரசி. இவர்களின் மகன் விக்னேஸ்வரன். இவர்கள், வி.எஸ்.பி., எண்டர்பிரைசஸ் என்ற பெயரில், 2024ம் ஆண்டு தீபாவளி தங்க நகை சீட்டு நடத்தினர். அவர்கள், 500 பேரிடம் ஒரு கோடி ரூபாய் வரை பெற்று ஏமாற்றியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, நேற்று பணம் கட்டி ஏமாந்த, 30க்கும் மேற்பட்டோர், மாதவரம் நெடுஞ்சாலையில், நேற்று மதியம் மறியலில் ஈடுபட்டனர். அவர்களுடன், திரு.வி.க.நகர் போலீசார் பேச்சு நடத்தி, விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து, மறியலை கைவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர். மறியலால், மாதவரம் நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை