உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / திருநங்கையருக்கு தொழில் பயிற்சி சான்றிதழ்

திருநங்கையருக்கு தொழில் பயிற்சி சான்றிதழ்

சென்னைதிருநங்கையரின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக செயல்படும் 'சகோதரன்' அமைப்பு, திருநங்கையரை ஒருங்கிணைத்து பல்வேறு பயிற்சிகளை தன்னார்வலர்கள் உதவியுடன் அளித்து வருகிறது.அந்த வகையில், பல மாநிலங்களில் செயல்படும் சென்னையை சார்ந்த தகவல் தொழில்நுட்ப நிறுவனமான சி.ஜி.ஐ., திருநங்கையருக்கு பல்வேறு உயர் பதவிகளை வழங்கி கவுரவித்து வருகிறது. இந்த நிலையில், 15க்கும் மேற்பட்ட பயிற்சிகள் வழங்கி, வேலை வாய்ப்பு பெற்று தரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.அந்த வகையில், இதுவரை 600 பேருக்கு தொழில் பயிற்சி அளித்துள்ளது. இதில், சமீபத்தில் பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி, அரும்பாக்கத்தில் நடந்தது.இதில், 100க்கும் மேற்பட்ட திருநங்கை, நம்பியர் பங்கேற்று சான்றிதழ்களை பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை