உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வாலிபால் எஸ்.ஆர்.எம்., மீண்டும் சாம்பியன்

வாலிபால் எஸ்.ஆர்.எம்., மீண்டும் சாம்பியன்

சென்னை : சென்னையில் நடந்த மாவட்ட அளவிலான 'ஏ' டிவிஷன் கைப்பந்து போட்டியில், எஸ்.ஆர்.எம்., பல்கலை அணி மீண்டும் சாம்பியன் பட்டம் வென்றது.தமிழ்நாடு கைப்பந்து கழகம் மற்றும் சென்னை மாவட்ட கைப்பந்து சங்கம் சார்பில், எஸ்.என்.ஜே.குழுமம் சார்பில், மாவட்ட அளவிலான 'ஏ' டிவிஷன் கைப்பந்து போட்டிகள், எழும்பூர் ராதாகிருஷ்ணன் அரங்கில் கடந்த இரு வாரமாக நடக்கின்றன.இதில், எஸ்.ஆர்.எம்., பல்கலை, ஐ.சி.எப்., வருமான வரித்துறை, இந்தியன் வங்கி, டி.ஜி.வைஷ்ணவ் உட்பட எட்டு அணிகள் பங்கேற்று, பலப்பரீட்சை நடத்தின. போட்டிகள் 'ரவுண்ட் ராபின்' முறையில் நடந்தன. போட்டியில் மொத்தமுள்ள ஏழு ஆட்டத்தில், அனைத்து போட்டிகளையும் வென்று நடப்பு சாம்பியன் எஸ்.ஆர்.எம்., பல்கலை அணி, மீண்டும் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. ஐந்து போட்டிகளை வென்று டி.ஜி.வைஷ்ணவ் அணி இரண்டாவது இடத்தையும், இந்தியன் வங்கி அணி மூன்றாவது இடத்தையும் வென்றன.முதலிடம் பிடித்த எஸ்.ஆர்.எம்., பல்கலை அணிக்கு 1.50 லட்சம் ரூபாய், கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இரண்டாம் இடம் பிடித்த டி.ஜி.வைஷ்ணவ் அணிக்கு, 1 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டது.ஐ.ஓ.பி., அணியின் சந்தோஷ் சிறந்த தாக்குதல் ஆட்டக்காரராகவும், எஸ்.ஆர்.எம்.,மின் சாய்நாத் சிறந்த தடுப்பு ஆட்டக்காரராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை