உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வாஷிங் மிஷின் தீக்கிரை

வாஷிங் மிஷின் தீக்கிரை

ஆவடி, திருமுல்லைவாயில், மணிகண்டபுரத்தைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணகோயல், 61; தனியார் நிறுவன கணக்காளர்.நேற்று இரவு, வாஷிங் மிஷினில் துணிகளை துவைத்து கொண்டிருந்தார். அப்போது, வாஷிங் மிஷின் திடீரென தீப்பிடித்து எரிந்து, வீட்டில் கரும்புகை சூழ்ந்தது. ராமகிருஷ்ண கோயல் அலறலை கேட்டு, அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து, மின்சாரத்தை துண்டித்து, பத்திரமாக மீட்டனர். தகவலறிந்து வந்த அம்பத்துார் எஸ்டேட் தீயணைப்பு துறையினர், தண்ணீரை பீய்ச்சியடித்து, தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மின் கசிவால் தீப்பிடித்து, வாஷிங் மிஷின் முழுதும் தீக்கிரையானது. திருமுல்லைவாயில் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை