உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / குடிநீரேற்று நிலையத்தில் வீணாகும் குடிநீர்

குடிநீரேற்று நிலையத்தில் வீணாகும் குடிநீர்

ராயபுரம்: ராயபுரம் குடிநீரேற்று நிலையத்தில், குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணானதால், பரபரப்பு ஏற்பட்டது. ராயபுரம், கல்லறை சாலையில் குடிநீரேற்று நிலையம் உள்ளது. இங்கிருந்து தினமும் 100க்கும் மேற்பட்ட லாரிகள் மூலம் ராயபுரம், காசிமேடு, புதுவண்ணாரப்பேட்டை, மண்ணடி, பிராட்வே உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு, குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இந்நிலையில், நேற்று ராயபுரம் குடிநீரேற்று நிலையத்தில், லாரிகளுக்கு தண்ணீர் நிரப்பும் குழாயில் பராமரிப்பு பணிகள் நடந்து வந்தது. பராமரிப்பு பணியின் போது, குழாய் உடைந்து தண்ணீர் குளம் போல் தேங்கியது. இதையடுத்து குடிநீர் வாரிய ஊழியர்கள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி