உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஷட்டர் திறந்தே கிடப்பதால் தடுப்பணையில் வீணாகும் நீர்

ஷட்டர் திறந்தே கிடப்பதால் தடுப்பணையில் வீணாகும் நீர்

குன்றத்துார்,குன்றத்துார் அருகே சோமங்கலத்தில் துவங்கும் அடையாறு கிளை கால்வாய், மணிமங்கலம் - -நடுவீரப்பட்டு சாலையை கடக்கும் இடத்தில், கடந்த 2020ம் ஆண்டு, 4.50 கோடி ரூபாய் மதிப்பில் பாலத்துடன் கூடிய தடுப்பணை கட்டப்பட்டது.இந்த தடுப்பணையின் ஷட்டர்கள் மழைக்காலத்தில் திறந்து விட்டும், கோடை கலத்தில் முறையாக மூடப்பட்டும் இருந்தன. இதனால், கடந்த ஆண்டு வரை கோடையிலும் இந்த தடுப்பணையில் நீர் நிரம்பியிருந்தது.இதனால், அந்த பகுதியை சுற்றி நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்தது. மேலும், கோடை காலத்தில் கால்நடைகள் தாகம் தணித்தன. தற்போது, இந்த தடுப்பணையை நீர்வளத்துறை அதிகாரிகள் பராமரிப்பதே இல்லை.தடுப்பணையின் ஷட்டர்கள் ஓராண்டாக சரிவர மூடப்படாமல், அடிப்பகுதியில் சற்று திறந்தே இருக்கிறது. இதனால், தடுப்பணையிலிருந்து தொடர்ச்சியாக தண்ணீர் வெளியேறுகிறது.எனவே, இந்த தடுப்பணையை முறையாக கண்காணித்து, நீர்வரத்திற்கு ஏற்ப திறந்து, மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை