உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  புது குழாய்களில் 10 இடங்களில் குடிநீர் கசிவு

 புது குழாய்களில் 10 இடங்களில் குடிநீர் கசிவு

ராமாபுரம்: ராமா புரத்தில் புதிதாக பதிக்கப்பட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு, குடிநீர் வெ ளியேறி வீணாகி வருகிறது. ஒரே இடத்தில் திரும்ப திரும்ப உடைப்பு ஏற்பட்டு குடிநீர் கசிவதால் , பகுதிமக்கள் அதிருப்தி அடைந்து உள்ளனர். வளசரவாக்கம் மண்டலம், 155வது வார்டு ராமாபுரத்தில், நிலத்திற்கடியில் பதிக்கப்பட்ட குடிநீர் குழாய்களில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு, க ழிவுநீர் கலந்துவந்தது. பழைய குழாய்கள் என்பதால், அவற்றை மாற்றி புதிதாக பொருத்தும் பணிகள் நடந்து வருகின்றன.இந்நிலையில், புதிதாக பதித்த குழாய்களில், குடிநீர் விநியோகம் சீராக உள்ளதா என, தொடர்ச்சியாக சோதனை நடத்தப்பட்டு வருகிறது. சோதனை நடக்கும் நாட்களில், புதிய குழாய்களின் உடைப்பு வழியாக குடிநீர் கசிந்து வருகிறது. இந்நிலையில், வள்ளுவர் சாலையில் நேற்று நடந்த சோதனை ஓட்டத்தில், 10க்கும் மேற்பட்ட இடங்களில் குழாய் உடைப்பு வழியாக குடிநீர் கசிந்து, சாலையில் வழிந்தோடியது. இதே இடத்தில், ஏற்கனவே குடிநீர் கசிந்துள்ளது. குடிநீர் குழா ய் பணியை முறையாக செய்யாததால், தொடர்ச்சியாக இதுபோல் நடக்கிறதா என, பகுதிமக்கள் கே ள்வி எழுப்பியுள்ளனர். குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறுகையில், 'மழைநீர் வடிகால்வாய் கட்டும் பணியால், குழாயில் உடைப்பு ஏற்பட்டிருக்கலாம். 'மழைக்காலம் என்பதால், சாலையில் பள்ளம் தோண்ட அனுமதியில்லை. அவசர கால வேலை என, மாநகராட்சியிடம் அனுமதி கேட்டுள்ளோம். அனுமதி கிடைத்ததும், குழாய் உடைப்பு விரைந்து சீரமைக்கப்படும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை