மேலும் செய்திகள்
ராஜிவ் காந்தி நகரில் குடிநீர் சப்ளை பாதிப்பு
23-Oct-2024
ஆவடி, ஆவடி மாநகராட்சி, ஐந்தாவது வார்டில், ராஜிவ்காந்தி நகர் 7, 8வது தெருவில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. பிருந்தாவன் நகர் முதல் தெருவில், ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு, அங்கிருந்து குழாய் வாயிலாக மேற்கூறிய இரண்டு தெருவில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.இதற்காக இரண்டு தெருவில் 32 பிளாஸ்டிக் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன.கடந்த அக்., மாதம் அங்குள்ள 20க்கும் மேற்பட்ட குழாய்கள் மர்ம நபர்களால் உடைக்கப்பட்டு, குடிநீர் வினியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டது. பகுதிவாசிகள் பணம் கொடுத்து தண்ணீர் வாங்கி பயன்படுத்தி வந்தனர். பலமுறை புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது குறித்து, அக்., 23ம் தேதி, நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக, கடந்த சில நாட்களுக்கு முன், மாநகராட்சி அதிகாரிகள், உடைந்த குழாயை சீரமைத்தனர். இதனால், குடிநீர் வினியோகம் சீரானது.
23-Oct-2024