521 பேருக்கு திருமண நிதியுதவி
பிராட்வே சென்னை மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் சார்பில், திருமண நிதியுதவியுடன் தங்க நாணயம் வழங்கும் விழா, பிராட்வே, ராஜா அண்ணாமலை மன்றத்தில் நேற்று நடந்தது. இதில், அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா, சென்னை கலெக்டர் - பொறுப்பு,- கீதா உள்ளிட்டோர் பங்கேற்று, 521 பயனாளிகளுக்கு, தலா 8 கிராம் தங்க நாணயத்துடன், 2.22 கோடி மதிப்பிலான திருமண நிதியுதவியை வழங்கினர். இத்திட்டங்களின் கீழ் பட்டப்படிப்பு அல்லது பட்டயப்படிப்பு தேர்ச்சி பெற்ற பெண்களுக்கு, திருமண நிதியுதவி வழங்கப்படுகிறது. இத்துடன் தாலி செய்வதற்காக, 8 கிராம் தங்க நாணயமும் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.