மேலும் செய்திகள்
சேதமான அரசுப் பள்ளி கட்டடம் அகற்றம்
30-Oct-2024
சென்னை,சென்னை சேப்பாக்கம் காமராஜர் சாலையில், 1886ம் ஆண்டு கட்டப்பட்ட பாரம்பரிய கட்டடத்தில், பொதுப்பணி மற்றும் நீர்வளத்துறை தலைமை அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. முன் ஒரே அமைச்சர் மற்றும் செயலரின் தலைமையின் கீழ், இத்துறைகள் இயங்கின. தி.மு.க., அரசு 2021ல் பொறுப்பேற்றதும், பொதுப்பணித்துறையில் இருந்து நீர்வளத்துறை தனியாக பிரிக்கப்பட்டு, தனித்தனியாக அமைச்சர்கள், செயலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். தலைமை அலுவலக கட்டடம் யாருக்கு சொந்தம் என்பதில், இரண்டு துறைகளுக்கு இடையே, புகைச்சல் இருந்து வருகிறது. துறைகளை பிரித்த அரசு, கட்டடம் யாருக்கு சொந்தம் என்பதை, இதுவரை தெளிவுப்படுத்தவில்லை. இந்நிலையில், கட்டடத்தின் முகப்பு பகுதியில், மின்விளக்கு வசதியுடன் நீர்வளத் துறை பெயர் பலகைகள், மூன்று இடங்களில் ஆங்காங்கே பொருத்தப்பட்டன. இதனால், நீர்வளத் துறை பெயர் அங்கு பளிச்சென்று தெரிந்தது.இதையடுத்து, பொதுப்பணித்துறை தென் மாநகர கோட்ட செயற்பொறியாளர் ஜெயகர் உத்தரவுப்படி, 'போர்ட்டிகோ' மேல் பகுதியில் பொருத்தப்பட்ட நீர்வளத்துறை பெயர் பலகை அகற்றப்பட்டது. இதனால், நீர்வளத்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். பல ஆயிரம் ரூபாய் செலவழித்து, துறைக்கு பெயர் பலகை வைக்கப்பட்ட நிலையில், அதை அகற்றியது ஏன் என்பது குறித்து, சம்பந்தப்பட்ட உதவி பொறியாளர்களை அழைத்து, விளக்கம் கேட்கப்பட்டது. உயர் அதிகாரிகளின் ஆலோசனைப்படி, பெயர் பலகை அகற்றப்பட்டதாக, அவர்கள் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து, பொதுப்பணித்துறையிடம், கடிதம் வாயிலாக விளக்கம் கேட்கப்பட்டு உள்ளது. விளக்கம் கிடைத்த பின், அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க, நீர்வளத்துறையினர் திட்டமிட்டு உள்ளனர்.
30-Oct-2024