உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அடிக்கடி மாற்றம் ஏன்?

அடிக்கடி மாற்றம் ஏன்?

சென்னையில் உள்ள படகுகள், மே 22ல் கள ஆய்வு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. பின், மே 26ம் தேதிக்கு மாற்றப்பட்டது. அன்றும் கள ஆய்வு நடத்தப்படவில்லை. மறு அறிவிப்பு வரும் வரை கள ஆய்வு ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.தற்போது, மூன்றாவது முறையாக வரும் ஜூன் 10ல் கள ஆய்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து மீனவர்கள் சங்க தலைவர் நாஞ்சில் ரவி கூறுகையில், ''அடிக்கடி மாற்றத்தால், நாட்டுப்படகு மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. ஏற்கனவே போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி, மூன்றாண்டுக்கு ஒரு முறை படகுகள் கள ஆய்வை மேற்கொள்ள வேண்டும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை