மனைவி, மகனுக்கு கத்திக்குத்து
குன்றத்துார்: குன்றத்துார் தச்சர் தெருவில் வசிப்பவர் பாபு, 43, ஆட்டோ ஓட்டுனர். இவரது மனைவி ரம்யா, 37, மகன் தர்ஷன்,16. நேற்று மாலை பாபு மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்தார். மனைவி ரம்யா கண்டித்துள்ளார். இதனால், இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.ஆத்திரமடைந்த பாபு காய்கறி வெட்டும் கத்தியால் ரம்யாவையும், தடுக்க வந்த மகன் தர்ஷனையும் குத்தி விட்டு தலைமறைவானார். அப்பகுதியில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு குன்றத்துாரில் உள்ள தனியார் மருத்துமனையில் அனுமதித்தனர். பாபுவை குன்றத்துார் போலீசார் தேடி வருகின்றனர்.