பஸ்சில் பெண் தற்கொலை முயற்சி
திருவான்மியூர் நீலாங்கரையைச் சேர்ந்தவர் சுமித்ரா, 30. இவர், திருவான்மியூர் பேருந்து நிலையத்தில் நின்ற பேருந்தில், வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கி கிடந்தார்.அங்கிருந்தோர் அவரை மீட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. திருவான்மியூர் போலீசார் விசாரணையில், சுமித்ரா ஓ.எம்.ஆரில் உள்ள ஒரு மாலில் பணி புரிவதாகவும், பெற்றோர் திருமண நடத்தி வைக்காததால், துாக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாகவும் தெரிய வந்தது.போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.