உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஆடு காணவில்லை என தகராறு பெண் துாக்கிட்டு தற்கொலை

ஆடு காணவில்லை என தகராறு பெண் துாக்கிட்டு தற்கொலை

எண்ணுார், :எண்ணுாரில், ஆடு காணாமல் போனதால் ஏற்பட்ட தகராறில், பெண் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். எண்ணுார், ராமமூர்த்தி நகரை சேர்ந்தவர் பூங்கொடி, 59. இவர், தன் வீட்டின் அருகே வசிக்கும் ஹேமலதாவிடம், தன் ஆடு காணவில்லை என விசாரித்துள்ளார். அப்போது, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றவே, ஹேமலதாவின் கணவரும், தி.மு.க., நிர்வாகியுமான சுரேஷ், பூங்கொடியை கையால் அடித்துள்ளார். இதனால், மன உளைச்சலடைந்த பூங்கொடி, நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து, எண்ணுார் போலீசார் வழக்கு பதிந்து, பூங்கொடி உடலை பிரேத பரிசோதனைக்கு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி, வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !