உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பஸ் மோதி பெண் பலி

பஸ் மோதி பெண் பலி

அடையாறு :அடையாறு, கஸ்துாரிபாய் நகரை சேர்ந்தவர் நேகா சேவியர், 38. மயிலாப்பூரில், ஒரு தனியார் மனோதத்துவ மருத்துவமனையில் பணிபுரிந்தார். நேற்று மாலை, பணி முடித்து வீடு நோக்கி இருசக்கர வாகனத்தில் புறப்பட்டார். அடையாறு மேம்பாலம் அணுகு சாலையில் சென்றபோது, திருவான்மியூரில் இருந்து கோயம்பேடு நோக்கி சென்ற மாநகர பேருந்து, அவர் சென்ற இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில், நிலைதடுமாறி கீழே விழுந்த நேகா, அதே பேருந்து சக்கரத்தில் சிக்கி பலியானார். அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், பேருந்து ஓட்டுநர் அண்ணாதுரை, 54, என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை