டிராக்டர் மோதி பெண் பலி
ஆவடி :ஆவடி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் சந்தோஷம்மாள், 50. இவர், நேற்று காலை, ஆவடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த உறவினரை பார்த்துவிட்டு, வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே வேகமாக வந்த தண்ணீர் டிராக்டர், அவர் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த சந்தோஷம்மாளை, அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவ பரிசோதனையில் அவர் இறந்தது தெரிந்தது. ஆவடி போக்குவரத்து புலனாய்வு போலீசார், விபத்து ஏற்படுத்திய ஆவடி, காமராஜ் நகரைச் சேர்ந்த ஓட்டுநர் அய்யனார், 28, என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.