பெண்ணிடம் நகை திருட்டு
தாம்பரம், கூடுவாஞ்சேரியை அடுத்த மாடம்பாக்கம், நாகாத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஹபிபா, 39. தாம்பரத்தில் உள்ள எல்.கே.எஸ்., நகைக்கடையில், மாதம் 10,000 ரூபாய் நகை சீட்டு போட்டிருந்தார். நேற்று மதியம் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள 2 சவரன் தங்க வளையல்களை வாங்கினார். பின், வளையல்களை, கை பையில் வைத்துக் கொண்டு, தாம்பரத்தில் இருந்து கூடுவாஞ்சேரிக்கு சென்ற தடம் எண்-500 என்ற, மாநகர பேருந்தில் ஏறினார்.அப்போது, கூட்ட நெரிசலை பயன்படுத்தி, மர்ம நபர்கள், கை பையில் இருந்த வளையல்களை திருடி சென்றனர். இது குறித்து, ஹபிபா கொடுத்த புகாரின்படி, தாம்பரம் போலீசார் விசாரிக்கின்றனர்.