உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / நகை வாங்குவது போல் நடித்து தங்க மோதிரம் திருடிய பெண்

நகை வாங்குவது போல் நடித்து தங்க மோதிரம் திருடிய பெண்

தண்டையார்பேட்டைநகை வாங்குவது போல் நடித்து, தங்க மோதிரத்தை திருடிச் சென்ற பெண்ணை, போலீசார் கைது செய்தனர். பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் அரிஹந்த், 34. திருவொற்றியூர் நெடுஞ்சாலையில், ஏழு ஆண்டுகளாக தங்க நகை கடை வைத்துள்ளார். இம்மாதம், 19 ம் தேதி காலை, இவரது கடைக்கு பெண் ஒருவர் நகை வாங்க வந்துள்ளார். கம்மல், மோதிரம் உள்ளிட்ட நகைகளை எடுத்து காண்பிக்க சொல்லியுள்ளார். பின், நகைகள் பிடிக்கவில்லை எனக்கூறி விட்டு சென்றுள்ளார். அப்பெண் சென்றதும் நகைகளை சரிபார்த்தபோது, 4 கிராம் தங்க மோதிரத்தை காணவில்லை. நகை கடை உரிமையாளர் அரிஹந்த், தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.'சிசிடிவி' கேமரா காட்சி பதிவுகளை கைப்பற்றி, போலீசார் விசாரித்தனர். திருட்டில் தொடர்புடைய, பழைய வண்ணாரப்பேட்டை, சின்னதம்பி தெருவைச் சேர்ந்த ராணி, 47, என்பவரை, நேற்று கைது செய்தனர். தங்க மோதிரம் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில், பூக்கடை காவல் நிலையத்தில் இவர் மீதான திருட்டு வழக்கு நிலுவையில் உள்ளது தெரிய வந்தது. கைதான ராணி, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை