செம்மஞ்சேரியில் கபடி போட்டி பெண்கள் அபார வெற்றி
சென்னை :செம்மஞ்சேரி பொதுமக்கள் மற்றும் அம்பேத்கர் ஸ்போர்ஸ் கிளப் சார்பில், ஆண்கள், பெண்களுக்கான 20ம் ஆண்டு கபடி போட்டிகள், செம்மஞ்சேரியில் நேற்று முன்தினம் நடந்தது.இதில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து, ஆண்கள் பிரிவில் 48 குழுக்களும், பெண்கள் பிரிவில் 16 குழுக்களும் பங்கேற்றன.ஆண்கள் பிரிவில், சென்னையை சேர்ந்த அன்னை விருகை குழு முதல் பரிசையும், கடலுாரை சேர்ந்த விமல் பிரதர்ஸ் குழு இரண்டாம் பரிசும் பெற்றன. பெண்கள் பிரிவில், கள்ளக்குறிச்சி டி.ஜி.எம்., கிளப் முதல் பரிசும், திருவண்ணாமலையை சேர்ந்த பீனிக்ஸ் கிளப் இரண்டாம் பரிசும் பெற்றன.மொத்தம், ஆண்கள் பிரிவில் எட்டு குழுக்களும், பெண்கள் பிரிவில் நான்கு குழுக்களும் வெற்றி பெற்றன. இவர்களுக்கு, 5,000 ரூபாய் முதல் 40,000 ரூபாய் வரை ரொக்கப்பரிசு, கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன.***