உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / புழுதிவாக்கத்தில் கிடப்பில் கிடந்த பாதாள சாக்கடை பணி துவக்கம்

புழுதிவாக்கத்தில் கிடப்பில் கிடந்த பாதாள சாக்கடை பணி துவக்கம்

புழுதிவாக்கம்:பெருங்குடி மண்டலம், வார்டு- 185, 186க்கு உட்பட்டது உள்ளகரம், புழுதிவாக்கம். இங்கு, 2015ல் பாதாள சாக்கடை திட்டப்பணி துவங்கப்பட்டு, 2019ல், 600க்கும் மேற்பட்ட தெருக்களில் பயன்பாட்டுக்கு வந்தது.இதில், குறிப்பிட்ட இரு வார்டுகளில், 52 தெருக்கள் விடுபட்டன. இதனால், கழிவுநீர் ஏற்ற வழியின்றி, பகுதிவாசிகள் சிரமப்பட்டனர்..விடுபட்ட தெருக்களில் திட்டப்பணியை துவங்கக்கோரி, குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம், சென்னை மாநகராட்சி, எம்.பி., - எம்.எல்.ஏ.,விடம் புகார் அளிக்கப்பட்டது.கடந்த 2022ல் அதிகாரிகள் ஆய்வு செய்த பின்பும், பணி துவங்கப்படவில்லை. இதுகுறித்த செய்தி, நம் நாளிதழில் வெளியானது.அதன்பின், விடுபட்ட தெருக்களில் பணிகளை துவங்கக்கோரி, நம் நாளிதழ் செய்தியை சுட்டிக்காட்டி, முதல்வரின் தனிப்பிரிவுக்கு, அப்பகுதிவாசிகள் புகார் அனுப்பினர்.இதன்படி, ஆறு ஆண்டுகள் கிடப்பில் இருந்த பகுதிகளில், முதல் கட்டமாக பணி துவங்க, பாலாஜி நகரில் சில தினங்களுக்கு முன் பூஜை போடப்பட்டது.பூஜையில், பகுதி கவுன்சிலர், அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள், பாலாஜி நகர் குடியிருப்போர் நலசங்கத்தினர் பங்கேற்றனர்.இதுகுறித்து, முதற்கட்டமாக குறிப்பிட்ட பகுதிகளில், இப்பணி செயல்படுத்தப்படும். படிப்படியாக விடுபட்ட அனைத்து பகுதிகளிலும் செயல்படுத்தப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ