பணி நிரந்தரம்: துாய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
தாம்பரம்: பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தாம்பரம் மாநகராட்சி வளாகத்தில், நுாற்றுக்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். தாம்பரம் மாநகராட்சியில் குப்பை அகற்றும் பணியை, ‘அவர் லேண்ட்’ என்ற தனியார் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இந்நிறுவனத்தில் பணியாற்றும் ஒப்பந்த துாய்மை பணியாளர்கள், கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநகராட்சி தலைமை அலுவலகத்தில், நேற்று ஆர்பாட்டம் நடத்தினர். பணி நிரந்தரம் செய்ய வேண்டும். குறைந்த பட்ச ஊதியம் நிர்ணயித்து, மாதம் தோறும் 5ம் தேதி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் கோஷங்கள் எழுப்பினர்.