உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தெரு நாய் கடித்த தொழிலாளி உயிரிழப்பு

தெரு நாய் கடித்த தொழிலாளி உயிரிழப்பு

சென்னை,மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் டாலப் ஷேக், 56. இவர், மதுரவாயல் அடுத்த வானகரத்தில், அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணியில் ஈடுபட்டு வந்தார்.இந்நிலையில், 10 நாட்களுக்கு முன், பணிபுரியும் இடத்திற்கு அருகே, தெரு நாய் ஒன்று அவரை கடித்துள்ளது. இதற்காக, அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.நேற்று, பணிபுரியும் இடத்திலேயே வடமாநில ஊழியர் உயிரிழந்தார். அவரது உடலை, சக ஊழியர்கள் கைப்பற்றி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். சம்பவம் குறித்து, மதுரவாயல் போலீசார் விசாரிக்கின்றனர்.வடமாநில ஊழியர் உயிரிழப்பிற்கு இரண்டு நாட்களுக்கு முன், கடித்த தெருநாய் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை