உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி  

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி  

பள்ளிக்கரணை, அக். 23--ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் சீர்முகமது, 28; கூலித்தொழிலாளி. இவர், மேடவாக்கம், சிவகாமி நகரில் தங்கி, புது வீட்டிற்கான கட்டட வேலை செய்து வந்தார்.நேற்று மதியம், 30 அடி நீள கம்பியை, தரை பகுதியிலிருந்து, வீட்டின் மாடிக்கு சீர்முகமது துாக்கிச் சென்றார். அப்போது, மின் கம்பியில், அவர் எடுத்து வந்த கம்பி உரசியது. இதில் சீர்முகமது, மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்தார்.சகதொழிலாளர்கள் அவரை மீட்டு, தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்தபோது, அவர் உயிரிழந்தது தெரிய வந்தது.தகவல் அறிந்த மேடவாக்கம் போலீசார், சீர்முகமதுவின் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை