உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வாகனத்தில் சிக்கி தொழிலாளி பலி

வாகனத்தில் சிக்கி தொழிலாளி பலி

புழல், புழல், பாலாஜி நகரில் ஐ.பி.சி., கன்வேயர் பெல்ட் கம்பெனி உள்ளது. இங்கு, வியாசர்பாடி, கல்யாணபுரத்தைச் சேர்ந்த ரூபன், 27, டெக்னீஷனாக பணிபுரிந்து வந்தார். நேற்று மாலை, லோடு ஏற்றிச் செல்வதற்காக, சரக்கு பெட்டிகளை கையாளும் 'போர்க் லிப்ட்' வாகனத்தை இயக்கும்போது எதிர்பாராதவிதமாக தரையில் சரிந்து விழுந்தது.ரூபன் விழுந்ததில், வாகனத்தின் கீழே சிக்கிக்கொண்டார். இதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே அவர் பலியானார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ