உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / போதை மாத்திரை விற்ற யோகா மாஸ்டர் கைது

போதை மாத்திரை விற்ற யோகா மாஸ்டர் கைது

விருகம்பாக்கம், விருகம்பாக்கம் வெங்கடேஸ்வரா நகர் முதல் தெருவிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் போதை மாத்திரை விற்பனை செய்யப்படுவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து, தி.நகர் துணை கமிஷனர் தலைமையிலான தனிப்படை போலீசார், அந்த இடத்தில் சோதனை மேற்கொண்டனர்.அந்த அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து, 1 லட்சத்து 68 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 42 கிராம் மெத் ஆம்பெட்டமைன் போதை மாத்திரை மற்றும் 13 ஊசிகள், 6,000 ரூபாய், ஒரு பைக் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.மேலும், போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட இருவரை கைது செய்தனர்.விசாரணையில் அவர்கள், கோவூர் சக்தி நகரைச் சேர்ந்த ராஜேஷ் குமார், 27; யோகா மாஸ்டர், மற்றும் சாலிகிராமம் இந்திரா காந்தி தெருவைச் சேர்ந்த சாய் பாலாஜி, 26; தனியார் வங்கி ஊழியர் என தெரிந்தது.தொடர் விசாரணையில் ராஜேஷ் குமார், பெங்களூரில் உள்ள தன் நண்பர் அருண் என்பவர் வாயிலாக, மெத் ஆம்பெட்டமைன் போதை மாத்திரை குறைந்த விலைக்கு வாங்கி, மொபைல் செயலி வாயிலாக, தனக்குத் தெரிந்த நபர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்தது தெரிந்தது.இதையடுத்து இருவரையும், விருகம்பாக்கம் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை