உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அரும்பாக்கம் மருத்துவமனையில் குழந்தைகளுக்கு யோகா பயிற்சி

அரும்பாக்கம் மருத்துவமனையில் குழந்தைகளுக்கு யோகா பயிற்சி

சென்னை :சென்னை, அரும்பாக்கத்தில் உள்ள யோகா மற்றும் இயற்கை மருத்துவமனையில், குழந்தைகள் மற்றும் பெற்றோருக்கான முகாம் நேற்று நடந்தது.கோடை காலத்தில் குழந்தைகள், மொபைல் போன், கணினி, 'டிவி' பார்ப்பதை குறைத்தல் மற்றும் இயற்கை முறையிலான உணவு முறைகள் உள்ளிட்டவை குறித்து, இம்முகாமில் தெரிவிக்கப்பட்டது. இதில், 30 குழந்தைகள் மற்றும் பெற்றோர், தாத்தா, பாட்டி உள்ளிட்டோரும் பங்கேற்றனர். பங்கேற்ற குழந்தைகளுக்கு, பாத மசாஜ், மெழுகுவர்த்தி சிகிச்சை முறைகள், யோகா பயிற்சிகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.இதுகுறித்து மருத்துவமனையின் கைநுட்பத்துறை தலைவர் ஓய்.தீபா கூறியதாவது:நம் உடலில் உள்ளங்கை மற்றும் கால் பாதங்களில், உடல் உறுப்புகளுக்கான நரம்புகள் உள்ளன. இவற்றை முறையாக மசாஜ் செய்யும்போது, உள் உறுப்புகள் சுறுசுறுப்பு அடைவதுடன், தொற்று நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.அதேபோல், மெழுகுவர்த்தி பயிற்சி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில், கண் பார்வை திறன் அதிகரிப்பதுடன், ஞாபக சக்தியும் அதிகரிக்கும்.குழந்தைகளுக்கு மலச்சிக்கல், சளி, சரும பிரச்னை, வயிற்றுப்போக்கு உள்ளிட்டவை ஏற்பட்டால், வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே குணப்படுத்துவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. மருத்துவமனைக்கு வரும் பெற்றோருக்கு முறையான வழிகாட்டுதல்கள் வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை