ஏசி ரயில் சேவை வாட்ஸாப்பில் கருத்து கூறலாம்
சென்னை:புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட 'ஏசி' புறநகர் மின்சார ரயில் சேவை பற்றிய கருத்துகளை, 'வாட்ஸாப்'பில் தெரிவிக்க எண் அறிவிக்கப்பட்டு உள்ளது.தெற்கு ரயில்வே சார்பில், செங்கல்பட்டு - சென்னை கடற்கரை வழித்தடத்தில், புதிதாக, புறநகர் 'ஏசி' ரயில் சேவை துவக்கப்பட்டுள்ளது.இந்த ரயிலில் மாதாந்திர கட்டணம் அதிகம் என, பயணியர் புகார் தெரிவித்தனர். மேலும், ரயில் இயக்கப்படும் நேரம் மாற்றியமைக்க வேண்டும் எனவும் கருத்து தெரிவித்தனர்.இந்நிலையில், இந்த ரயிலின் நேரங்கள் உள்ளிட்ட விசாரணைகள், புகார்கள் மற்றும் கருத்துகளை, 63747 13251 என்ற பிரத்யேக 'வாட்ஸாப்' எண்ணிற்கு பயணியர் தெரிவிக்கலாம். இதில், குறுஞ்செய்தியை தவிர, அழைப்புகளோ, குரல் பதிவுகளோ ஏற்கப்படாது என, ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.