உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / விஷ பூச்சி கடித்து இளம்பெண் பலி

விஷ பூச்சி கடித்து இளம்பெண் பலி

ஆவடி:ஆவடி அடுத்த கண்ணபாளையம், மேட்டுப்பாளையம், பாரதி நகரைச் சேர்ந்தவர் ஷர்மிளா, 19; தனியார் நிறுவன ஊழியர். இவர், கடந்த 29ம் தேதி காலை துாங்கி எழுந்தபோது, உடலில் ஏதோ பூச்சி கடித்து, அரிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், வாயில் நுரை வந்து மயங்கி விழுந்துள்ளார். மேல் சிகிச்சைக்காக, சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். ஆவடி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ