மேலும் செய்திகள்
திருந்தி வாழும் பெண்களுக்கு நலத்திட்டம்
08-Oct-2024
வண்ணாரப்பேட்டை:சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர், 20 வயது இளம்பெண். இவரை, கோபிநாத் என்பவர் சில ஆண்டுகளாக காதலித்து வந்தார். கோபிநாத் நடவடிக்கை சரியில்லாததால், அவரிடம் இருந்து அப்பெண் விலகினார். இதனால் கோபமடைந்த கோபிநாத், இருவரும் ஒன்றாக எடுத்த புகைப்படங்களை உறவினர்களுக்கு அனுப்பி, அப்பெண்ணிற்கு தொடர்ந்து மன உளைச்சலை ஏற்படுத்தி வந்தார். 'தன்னை காதலித்து, திருமணம் செய்து கொள்ள வேண்டும்; இல்லாவிட்டால், உன்னை சும்மா விட மாட்டேன்' என்றும் மிரட்டினார்.மேலும், வண்ணாரப்பேட்டை பவர் ஹவுஸ் பேருந்து நிறுத்தம் அருகே, பெண் நடந்து சென்றபோது, அவரது துப்பட்டாவை, கோபிநாத் பிடித்து இழுத்து கீழே தள்ளி, காலால் எட்டி உடைத்து, ஆபாசமான வார்த்தைகளால் பேசி, ரகளை செய்தார். பெண் கொடுத்த புகாரின்படி, வண்ணாரப்பேட்டை மகளிர் போலீசார், பெண்கள் வன்கொடுமை சட்டம், தகவல் தொழில்நுட்ப சட்டம், பாரதிய நியாய சன்ஹிதா ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிந்து, முகப்பேரை சேர்ந்த கோபிநாத், 22 என்பவரை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.
08-Oct-2024