உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பெண்ணை அவதுாறாக பேசிய வாலிபர் கைது

பெண்ணை அவதுாறாக பேசிய வாலிபர் கைது

புளியந்தோப்பு: பிரியாணி கடையில், பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்ட வாலிபர் கைது செய்யப்பட்டார். தண்டையார்பேட்டை பகுதியைச் சேர்ந்த, 30 வயது பெண், நேற்று மதியம், தன் தாயுடன் புளியந்தோப்பு நெடுஞ்சாலை பகுதியில் உள்ள பிரியாணி கடைக்கு சென்று பிரியாணி சாப்பிட்டார். அப்போது, இவரது பின்புறமாக அமர்ந்திருந்த நபர், அந்த பெண்ணை இடித்துள்ளார். இதில், இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டு, அப்பெண்ணை வாலிபர் தகாத வார்த்தையால் திட்டியுள்ளார். இதுகுறித்து, புளியந்தோப்பு காவல் நிலையத்தில், அப்பெண் புகார் அளித்தார். புளியந்தோப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து, குருசாமி ராஜாபுரம் 3வது தெருவை சேர்ந்த தனசேகர், 28, என்ற வாலிபரை, நேற்று கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !