ஜிம் பெண் பயிற்சியாளரிடம் ரூ.5 லட்சம் மோசடி: வாலிபர் கைது
கொடுங்கையூர், கொடுங்கையூர், முத்தமிழ் நகரைச் சேர்ந்த 35 வயது பெண், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, மகன், மகளுடன் தனியாக வசித்து வருகிறார்.பெரம்பூரில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில் பணிபுரிந்த இவருக்கு, அஜிஸ் உல்லா, 35, என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.அஜிஸ் உல்லா ஆடு வாங்கி விற்கும் தொழில் செய்து வருவதாகவும், இரண்டு ஆண்டுகளுக்கு முன் தொழில் செய்ய அப்பெண்ணிடம் 5 லட்ச ரூபாய் கேட்டுள்ளார்.அவரும், தன் தங்கை கணவர் சிராஜுதினிடம் இருந்து 5 லட்ச ரூபாய் கடன் வாங்கி கொடுத்தார். பின் அஜிஸ் உல்லா பணத்தை தராமல் ஏமாற்றியதோடு, தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி அப்பெண்ணை வற்புறுத்தி வந்துள்ளார்.இந்த நிலையில், நேற்று அப்பெண்ணின் வீட்டிற்கு வந்த அஜிஸ் உல்லா, பேச வேண்டுமென கூறி, அவரை வெளியே அழைத்துள்ளார். பின், அத்து மீறலில் ஈடுபட முயற்சித்து, மிரட்டல் விடுத்து தப்பினார்.இது குறித்து விசாரித்த கொடுங்கையூர் போலீசார், அஜிஸ் உல்லாவை நேற்று கைது செய்தனர்.