உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சிறுமியிடம் அத்துமீறல் பொழிச்சலுார் வாலிபர் கைது

சிறுமியிடம் அத்துமீறல் பொழிச்சலுார் வாலிபர் கைது

பம்மல்:பம்மலை அடுத்த பொழிச்சலுாரை சேர்ந்தவர் பாலா, 26. நேற்று முன்தினம் மாலை, அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டில், பீரோ பழுது பார்க்க சென்றார்.அப்போது, அந்த வீட்டில், 17 வயது சிறுமி தனியாக இருப்பதை அறிந்த பாலா, பீரோவை பழுது பார்ப்பதை விட்டு, சிறுமியின் வாயை பொத்தி, கை, காலை பிடித்து இழுத்து, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.இதை கண்டு அதிர்ச்சியடைந்த சிறுமி, கத்தி கூச்சலிட்டார். அலறல் சத்தம் கேட்டு அங்கு திரண்ட பொதுமக்கள், அந்த நபரை பிடித்து, தர்ம அடி கொடுத்து, சங்கர் நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார், பாலாவை கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி