மேலும் செய்திகள்
குற்றங்களை மறைக்கும் போலீசால் புலம்புது சிட்டி
24-Jun-2025
சென்னை, பெண்ணிற்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய இளைஞர் கைது செய்யப்பட்டார்.தண்டையார்பேட்டையைச் சேர்ந்த, 21 வயது இளம்பெண், வடக்கு மண்டல சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்து இருந்தார்.அதில், 'கடந்த, 2024 ஆக., 27ம் தேதி 'ஆர்.டி.ஆர் மணி கெட்டவன்மணி' என்ற இன்ஸ்டாகிராம் ஐ.டி.,யில் இருந்து குறுஞ்செய்தி வந்தது. அதை 'பிளாக்' செய்தேன். இந்த நிலையில், அதே ஐ.டி.,யில் இருந்து, வீடியோவின் 'கமெண்ட்' பகுதியில் அவதுாறாகவும், அருவருக்கத்தக்க வகையிலும் குறுஞ்செய்தி வருகிறது; சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, குறிப்பிட்டு இருந்தார்.போலீசாரின் விசாரணையில், கொடுங்கையூர் எழில் நகரைச் சேர்ந்த திவாகர், 29, என்பவர் ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பியது தெரியவந்தது.நேற்று முன்தினம் இரவு திவாகரை போலீசார் கைது செய்தனர்.
24-Jun-2025