உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கஞ்சா கடத்திய வாலிபர் கைது

கஞ்சா கடத்திய வாலிபர் கைது

திருவொற்றியூர்:வண்ணாரப்பேட்டை துணை கமிஷனர் தனிப்படை போலீசாருக்கு, ஆந்திராவில் இருந்து ரயில் வழியாக கஞ்சா கடத்தி வருவதாக தகவல் கிடைத்தது.நேற்று அதிகாலை, திருவொற்றியூர் ரயில் நிலையம் அருகே, தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்திற்கிடமான வகையில் பையுடன் சென்ற வாலிபரை மடக்கி விசாரித்தனர். அவர் முன்னுக்குபின் முரணாக பதிலளித்துள்ளார். விசாரணையில், திருவொற்றியூர், சடையங்குப்பத்தைச் சேர்ந்த குணா, 21, என்பது தெரிய வந்தது. சந்தேகமடைந்த போலீசார், அவரது பையை வாங்கி சோதனையிட்டனர். இதில், 8 கிலோ கஞ்சா சிக்கியது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ