வெள்ளி செயின் பறித்த வாலிபர் கைது
வேளச்சேரி, வாலிபரிடம் வெள்ளி செயின் பறித்த நபரை, போலீசார் கைது செய்தனர். பீஹார் மாநிலத்தை சேர்ந்தவர் ஆஷிக் ஆலம், 28. நேற்று முன்தினம் இரவு, கிண்டி செல்லும் பேருந்துக்காக விஜயநகர் பேருந்து நிலையத்தில் காத்திருந்தார். அப்போது, அருகில் வந்த நபர், அவரிடம் மொபைல் போன் பேச கேட்டுள்ளார். தர மறுக்கவே, அவர் அணிந்திருந்த 29 கிராம் வெள்ளி செயினை பறித்து தப்பி சென்றார். புகாரின்படி வேளச்சேரி போலீசார் நடத்திய விசாரணையில், வேளச்சேரி, தண்டீஸ்வரம் நகரை சேர்ந்த சரண்பாபு, 24, என்பவர் என, தெரிந்தது. நேற்று, போலீசார் அவரை கைது செய்தனர்.