உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 3 மொபைல் திருடிய வாலிபர் கைது

3 மொபைல் திருடிய வாலிபர் கைது

எம்.ஜி.ஆர்., நகர், எம்.ஜி.ஆர்., நகர், அஞ்சுகம் தெருவைச் சேர்ந்தவர் பிரியா, 25; தனியார் வங்கி ஊழியர். கடந்த 3ம் தேதி இரவு, புழுக்கம் காரணமாக வீட்டின் கதவை திறந்து வைத்து துாங்கினார்.மறுநாள் காலை, வீட்டில் இருந்த மூன்று மொபைல் போன்கள் திருடு போனது தெரியவந்தது.இதுகுறித்து விசாரித்த எம்.ஜி.ஆர்., நகர் போலீசார், மொபைல் போன்களை திருடிய, எம்.ஜி.ஆர்., நகர், மிசா அபிரகாம் முதல் குறுக்கு தெருவைச் சேர்ந்த முத்துராமலிங்கம், 29, என்பவரை கைது செய்தனர். மூன்று மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ