உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரயிலில் அடிபட்டு வாலிபர் பலி

ரயிலில் அடிபட்டு வாலிபர் பலி

ஆவடி அம்பத்துார் ரயில் நிலையம், மூன்றாவது நடைமேடை அருகே 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பதாக, நேற்று மதியம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.சம்பவ இடத்திற்கு சென்ற ஆவடி ரயில்வே போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், தண்டவாளத்தை கடக்கும்போது, சென்னையில் இருந்து கோயம்புத்துார் நோக்கி சென்ற 'இன்டர் சிட்டி' விரைவு ரயிலில் அடிபட்டு இறந்தது தெரிந்தது. இறந்தவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை