வாலிபரை திசை திருப்பி 60,000 ரூபாய் பறிப்பு
வளசரவாக்கம், அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ., காலனியைச் சேர்ந்தவர் பிரதீப், 22; தனியார் நிறுவன ஊழியர். இவர், நேற்று மாலை அலுவலக பணியாக, வளசரவாக்கம், ஆற்காடு சாலையில் உள்ள தனியார் வங்கிக்கு சென்று 60,000 ரூபாய் எடுத்தார். பணத்தை டி.வி.எஸ்., எக்ஸ்.எல்., ஸ்கூட்டரின் முன் மாட்டிக் கொண்டு அலுவலகம் திரும்பினார். வளசரவாக்கம், பிருந்தாவன் நகர் அருகே சென்றபோது, இரண்டு பைக்குகளில் பின்னால் வந்த நான்கு பேர், 'உங்கள் பணம் பறக்கிறது' என, பிரதீப்பிடம் தெரிவித்தனர். இதையடுத்து, வாகனத்தில் இருந்து இறங்கிய பிரதீப், கீழே கிடந்த 300 ரூபாயை எடுத்து திரும்பி பார்த்தபோது, பைக்கில் வந்த மர்ம நபர்கள் பணத்தை எடுத்துக் கொண்டு பறந்தனர். வளசரவாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.