உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / டூ - வீலர்கள் திருடிய வாலிபர்கள் சிக்கினர்

டூ - வீலர்கள் திருடிய வாலிபர்கள் சிக்கினர்

சென்னை :வெவ்வேறு இடங்களில் பைக் திருடிய இருவரை, போலீசார் கைது செய்தனர். திருவல்லிக்கேணி, அயோத்தியா நகரைச் சேர்ந்தவர் செந்தில், 42. கடந்த 6ம் தேதி காலை திருவல்லிக்கேணி டாக்டர் பெசன்ட் சாலையில் உள்ள 'ஆவின்' பாலகத்திற்கு, தன் 'ஹீரோ ஸ்பிளண்டர்' பைக்கில் சென்றார். பால் வாங்கி விட்டு வந்தபோது, அவரது பைக் திருடு போனது. அதேபோல, திருவல்லிக்கேணி, நீலம் பாஷா தர்காபுரத்தைச் சேர்ந்த புருஷோத்தமன், 38, என்பவரது, 'ஹோண்டா ஆக்டிவா' ஸ்கூட்டர், கடந்த 8ம் தேதி திருடு போனது. மேற்கண்ட இரு சம்பவங்கள் குறித்த புகாரையடுத்து, ஐஸ்ஹவுஸ் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில், பட்டினப்பாக்கம் சீனிவாசபுரத்தைச் சேர்ந்த செல்வகுமார், 29, என்பவர் பைக் திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது. நேற்று அவரை கைது செய்த போலீசார், வாகனங்களை பறிமுதல் செய்தனர். இதேபோல் ராயப்பேட்டை, சைவமுத்தையா முதல் தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன், 56; பெயின்டர். கடந்த 10ம் தேதி இரவு வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த அவரது 'ஹோண்டா ஆக்டிவா' ஸ்கூட்டர் திருடு போனது. ஐஸ்ஹவுஸ் போலீசாரின் விசாரணையில், கோபாலபுரத்தைச் சேர்ந்த ஆனந்த், 23, என்பவர் திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது. நேற்று அவரை கைது செய்த போலீசார், திருடிய பைக்கை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ