உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சொமேட்டோ ஊழியர் விபத்தில் பலி

சொமேட்டோ ஊழியர் விபத்தில் பலி

செங்குன்றம், பைக்கில் சென்ற 'சொமேட்டோ' ஊழியர், நின்று கொண்டிருந்த டிராக்டர் மீது மோதி, சம்பவ இடத்திலேயே பலியானார். செங்குன்றம், காந்தி நகரைச் சேர்ந்தவர் அருண்குமார், 27. சொமேட்டோ உணவு டெலிவரி நிறுவன ஊழியர். நேற்று மாலை 3:00 மணிக்கு, தன் 'ஸ்பிளண்டர் பேஷன்' பைக்கில், பாடியநல்லுார் சிக்னலில், ஜி.என்.டி., சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு எச்சரிக்கை பலகை எதுவும் வைக்காமல், சாலையை துாய்மைப்படுத்தும் பணியில் இருந்த உத்தரபிரதேசத்தை சேர்ந்த அகிலேஷ், 30, டிராக்டரை சாலையோரம் நிறுத்தி வைத்திருந்தார். வேகமாக வந்த அருண்குமார், சிக்னல் இல்லாமல் நின்ற டிராக்டர் மீது மோதி, சம்பவ இடத்திலேயே பலியானார். செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து, அகிலேசை கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை