உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சதுர்த்தி ஆலோசனை கூட்டம்

சதுர்த்தி ஆலோசனை கூட்டம்

பொள்ளாச்சி : பொள்ளாச்சியில், விஷ்வ இந்து பரிஷத் சார்பில், விநாயகர் சதுர்த்தி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், நகர அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட செயலாளர் அருண்குமார் தலைமை வகித்தார். நகரத் தலைவர் சபாபதி முன்னிலை வகித்தார். வரும் 31ம் தேதி, விநாயகர் சதுர்த்தி கிளை கமிட்டி ஆலோசனை கூட்டம் நடத்துவது; விநாயகர் சதுர்த்தி விழாவை, செப்., 1 முதல் 3ம் தேதி வரை விமரிசையாக கொண்டாடுவது; பொள்ளாச்சி புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டியுள்ள இடத்தில், அகற்றப்பட்ட விநாயகர் கோவிலுக்கு, பஸ் ஸ்டாண்டுக்குள் இடம் ஒதுக்கி தர வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நகர செயலாளர் கருணாகரன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ