உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பெரிய விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா

பெரிய விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா

சூலுார்: ஜல்லிப்பட்டி பெரிய விநாயகர் கோவில் கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.சுல்தான்பேட்டை அடுத்த ஜல்லிப்பட்டி பெரிய விநாயகர் கோவிலில் திருப்பணிகள் முடிந்து கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. இரண்டு கால ஹோமம், பூர்ணாகுதி முடிந்து, புனித நீர் கலசங்கள் மேள, தாளத்துடன் கோவிலை சுற்றி எடுத்து வரப்பட்டன.காலை, 10:00 மணிக்கு, கோபுர கலசம் மற்றும் பெரிய விநாயகர்,பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. தச தானம், தச தரிசனம் முடிந்த பின், மகா அபிஷேக, அலங்கார பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை