உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / லோக் அதாலத்தில் 17 வழக்குகளுக்கு தீர்வு

லோக் அதாலத்தில் 17 வழக்குகளுக்கு தீர்வு

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் நீதிமன்றத்தில் லோக் அதாலத் முறையில், 17 வழக்குகளுக்கு சமரசம் ஏற்பட்டு, ஒரு கோடியே 24 லட்சம் ரூபாய் வழங்க தீர்வு காணப்பட்டது. தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு வழிகாட்டுதலின்படியும், மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின் பேரில், தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்),மேட்டுப்பாளையம் நீதிமன்றத்தில் நடந்தது. மேட்டுப்பாளையம் சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், சார்பு நீதிபதியுமான பழனிவேல் தொடங்கி வைத்தார். உரிமையியல் நீதிமன்ற நீதிபதி ஷன்மதி, குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி விக்னேஷ் ஆகியோர் பங்கேற்றனர். நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த, 17 வழக்குகளுக்கு சமரசம் ஏற்பட்டு, ஒரு கோடியே, 24 லட்சம் ரூபாய் வழங்க தீர்வு காணப்பட்டது. நீண்ட காலமாக தேங்கி கிடந்த, 17 வழக்குகளுக்கு ஒரே நாளில் தீர்வு கிடைத்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை